தமிழ்நாடு அரசு 2026-2027ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்விவாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் 2026-2027ம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்புபயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்விஉதவித்தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ்விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் 2026-2027ம் கல்வியாண்டில் முதுகலைபட்டப் படிப்பு படிக்க உலகளாவிய குவாக்கரெல்லிசைமண்டஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்விநிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் நிதி, மனிதநேயம் கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேயபடிப்புகள் சமூகஅறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப்பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல்வேண்டும். மேலும் வெளிநாடு சென்றபின் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஏற்கெனவே கல்லூரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/ welfschemesminorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டா் விஷுமகாஜன், தெரிவித்துள்ளார்.