தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் சந்தனம் குங்குமம் தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் யாகம் சற்குரு சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.
அம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும் புத்ரபாக்கியம் கிட்டும் மனம் நிம்மதி பெரும் செல்வ வளம் பெருகும் தீராத நோய்கள் தீரும் கடன் தொல்லைகள் தீரும் அரசியலில் மேன்மை கிட்டும் முன்னோர்களின் சாபம் நீங்கும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பொங்கிடும் என்பதற்காக அபிஷேகம் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை சித்தர் பீட அறக்கட்டளை சார்பில் வழிபாட்டு குழுவினா் செய்திருந்தனர்