தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு மன்றம் தூய மரியன்னை கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து தீபாவளி வாழ்த்து அட்டைகள் தயாரித்து எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது பல ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முன்னதாக வாழ்த்து அட்டைகள் எழுதி ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வருவது உண்டு பல ஆண்டுகளாக கடிதம் வாழ்த்து அட்டைகள் எழுதும் பழக்கம் குறைந்து போனதால் வாட்ஸ் அப் மூலமாக வாழ்த்துக்களை அனுப்பும் நிகழ்வு நடைபெறுவதால் மீண்டும் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்வை மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தூத்துக்குடி புத்தக வாசிப்பு மன்றமும் தூய மரியன்னைக் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து செய்தனர்.
நிகழ்ச்சியில் மாணவிகள் தாங்களே வாழ்த்து அட்டைகளை தயாரித்து எழுதி கொண்டு வந்திருந்த அனைத்தும் நன்றாக இருந்ததால் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பு மன்றம் சார்பில் கல்லூரி முதல்வர் சிபானா புத்தகம் பரிசாக வழங்கினாா். வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் புத்தகம் வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து மற்றும் அமைப்பாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்