தூத்துக்குடி போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிஏடபிள்யுஎன் எனும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான சுபாஷினி தலைமையுரையாற்றினார். முன்னதாக போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி தமிழாசிரியர் மேரி சீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை கனக ரத்தினமணி வரவேற்புரையாற்றினாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் பிரேமானந்தம், செயலாளரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, ஜூனியர் நிர்வாக உதவியாளர் அருள்மணிராஜ், 29 தமிழ்நாடு சுதந்திர காலாட்படை கம்பெனி என்.சி.சி.யைச் சேர்ந்த சுபேதார் ஜனார்த்தன், ஹவில்தார் ராஜேஷ் பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதையில்லா வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியா் ஜீசஸ் ஆல்பன் நன்றியுரை ஆற்றினார்.