தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் திமுக வேட்பாளாின் வெற்றிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியான குமாரபாளையம், பேரூராட்சிக்குட்பட்ட பாகம் எண் 194ல் வெள்ளப்பநாயக்கன் வலசு மீனாட்சிபுரம் ஜெ ஜெ நகா் சீரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் சாதனைகள் குறித்து எடுத்துக்கூறி வாக்காளா்களிடம் வாக்கு சேகாித்து தவெக ஆட்சியில் தொடரும் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்கு சேகாித்தாா்.
கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.