தூத்துக்குடி தமிழக இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்டம், ஐப்பசி திருவிழா, கந்தசஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திருக்கோவிலில் அறங்காவலர்கள் குழு இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது அதுபோல தேரோட்ட கமிட்டி என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருவிழா வருகிற 26ம் தேதி துவங்குகிறது 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். நவம்பர் மாதம் மூன்றாம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்களில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் தேரோட்ட கமிட்டி உறுப்பினர்கள் என்று புதியதாக அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்த போது கோவில் அறங்காவலர் குழு எந்தவிதமான ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை அதுபோல இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை. தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கோவில் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் தேரோட்ட கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதியதாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது விதிகளை மீறிய செயலாகும் அறநிைலத்துறை எந்த விதமான அனுமதியும் கொடுக்கப்படவில்லை அதுபோல அறங்காவலர் குழு அனுமதி பெறப்படவில்லை கோவில் நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக முடிவெடுத்து 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளது இது ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அறங்காவலர் குழுவை மீறி சில நிகழ்வுகள் நடைபெற்றது போல தற்போது தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது ஆகையால் உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை அனுமதி இல்லாமலும் அறங்காவலர் குழு அனுமதி இல்லாமலும் தேரோட்ட கமிட்டி உறுப்பினர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக அழைப்பிதலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.