தூத்துக்குடி முத்தையாபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முத்தையாபுரம் பகுதி ஊர் பெரியோர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாய தலைவர்கள் அனைத்து அமைப்பு இயக்க நிர்வாகிகள் ஜமாத் நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டு விபத்துகளை தடுப்பதற்காகவும் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தூத்துக்குடி உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் கடைசி பகுதி வரை விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள் கை கால்களை இழந்து மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள் மற்றும் இன்றைய இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வாழ்க்கையை வீணடித்து கொண்டிருப்பதால் இது சம்பந்தமாக நடத்தி கலந்து கொண்ட அனைவரும் அவரவர்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் பேசுகையில் தூத்துக்குடி உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் முதல் பேருந்து நிறுத்தம் தோப்பு பேருந்து நிறுத்தம் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் வரை ரோட்டின் இரு புறங்களிலும் மணல்கள் கிடப்பதால் விபத்து ஏற்படுகிறது ஆகையினால் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ரோட்டின் நடுவில் மாநகராட்சி சார்பில் கட்டிய சுவரை ஆபத்து நடைபெறாத வண்ணம் சரியான முறையில் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் ரோட்டின் மேல் நிறுத்தக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களையும் மாவட்ட காவல் துறை நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பல உயிர்களை எடுப்பதற்கு காரணமாகவும் குற்ற செயல்கள் நடப்பதற்கு ஏதுவாகவும் இருக்கக்கூடிய முத்தையாபுரம் முதல் பேருந்து நிறுத்தம் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 மதுக்கடைகளையும் அரசு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக நாம் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் கலெக்டா், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தூத்துக்குடி வட்டாட்சியாளர் தூத்துக்குடி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகளுக்கு கோரிக்கை அடங்கிய தீர்மான நகலை ரெஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பி 15 நாட்களுக்குள் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வோம் 15 நாட்களுக்குள் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களாகிய நாம் ஒன்று கூடி முத்தையாபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் ஊர் மக்கள் அனைவரும் மக்கள் நலனுக்காக எடுக்கக்கூடிய போராட்டங்களில் உங்களோடு துணை நிற்போம் வெற்றி கிட்டும் வரை ஓய மாட்டோம் மக்கள் நலனுக்காக போராடக்கூடிய போராளிகளையும் ஆயிரக்கணக்கான பொது மக்களையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் நாம் வைக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் அரசு நிறைவேற்றி தரும் என நம்புவதாக ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்