தூத்துக்குடி சுதேசி நாயகன் வெள்ளையன் வியாபாரிகளை காப்பாற்றிடவும், பயமில்லாமல் வணிகம் செய்யவும் பாதுகாப்பு அரணாக ஒரு அமைப்பு ஆரம்பிக்க நினைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்று அதற்கு பெயரிட்டு அதனை மாபெரும் விருட்சமாக வளர செய்து வியாபாரிகளை பாதுகாத்து வந்தார். ஆன்லைன் வர்த்தகம் அந்நிய பொருட்களுக்கு தடை, சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டில் ஆளும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து உள்ளூர் வணிகர்களை காத்து வந்தார்கள். அவர் மறைந்தாலும் அவரது வழியில் தற்போது மே 5ல் வெற்றிகரமாக 43வது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது.
அப்போது மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், பொதுச்செயலாளர் மெஸ்மர்காந்தன் வெள்ளையன், பொருளாளர் பீர் முகமது ஆகியோரின் தலைமையில் நடைெபற்ற மாநாட்டில் வளர்ச்சி நிதி குலுக்கல் திட்டத்தில் முதல் பரிசு கார் அறிவித்திருந்த நிலையில் அந்த பரிசின் அதிர்ஷ்டசாலி தூத்துக்குடி மாவட்டத்தில் தெர்மல்நகர் கிளைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து சிறு ஹோட்டல் நடத்திவரும் ரவிக்குமாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கீழ் உள்ள தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தில் வைத்து கிளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில துணைத்தலைவர் பொன்.தனகரன் பாஸ்கர், மாநில இணைச்செயலாளர் வில்லியம்ஸ் மஸ்கர்னாஸ், ஜவஹர், விக்னேஷ் தலைமையில் ரவிக்குமாருக்கு முதல் பரிசுக்கான காரை வழங்கினார்கள்.
சுதேசி நாயகன் வழியில் சிறப்பாக வெற்றி நடை போட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டம் என்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும், சொன்னதை செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்று பெருமிதத்தோடு மாவட்ட தலைவர் ராஜா கூறினாா்.
கூட்டத்தில் மில்லர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசேகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னதங்கம், பர்னிசர் சங்க தலைவர் ரத்னா தர்மராஜ், வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் சரவணமூர்த்தி, பாளை ரோடு பாதுகாப்பு சங்க தலைவர் பாக்யாமணி, ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயசுரேஷ், தெர்மல் நகர் சங்க பொருளாளர் அங்குசாமி, துணைச் செயலாளர் தேவ ஆனந்த், துணைத்தலைவர் முஸ்தபா மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். தெர்மல்நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
வெள்ளையன் மறைந்தாலும் அவரது வழிகாட்டுதலில் வணிகர்களை என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வாழ வைக்கும்.