தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாரஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித் திட வேண்டி ஸ்ரீவாராஹிஅம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.