தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பட்டி கடற்கரை கிராமத்தில் நல்ல ஆலோசனை மாதா ஆலய பங்கில் உள்ள கடல் மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் மே 13ம் தேதி அசன பெருவிழா நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டும் பங்குத்தந்தை வினித்ராஜா தலைமையில் ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் அசன பெருவிழா நடைபெற்றது. கடலில் கடல் மாதா படத்தை மீன் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கடலில் மிதக்க விட்டிருந்த காட்சி மிக அருமையாக இருந்தது. நிகழ்ச்சியில் வெள்ளைபட்டி பங்கு இறைமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் அனைத்து சபையினரும் மற்றும் அனைத்து அன்பியங்களும் செய்திருந்தனா்.