தூத்துக்குடி தனியாா் பேலசில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவிமைய மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வி ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள். தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கம் துணைத் தலைவர் கலைவாணன், செயலாளர் பீர் முகமது. துணைத் தலைவர் பிரகாஷ். பொருளாளர் ஜெய்சங்கர் சேலம் காண்ட்ராக்ட் ஒர்க்ஸ் வேலு. மக்கள் டெய்லி செய்தி குழுமம் சங்கர். எஸ்கே கன்ஸ்ட்ரக்சன் சாமிகண்ணு, ஆகாஷ் கன்ஸ்ட்ரக்சன் பிரபாகரன், ஹச்எம்எஸ் மாவட்ட செயலாளர் வ உ சி துறைமுகம் ஆணைய உறுப்பினர் சத்யா, விமல் ஷிப்பிங் லிமிடெட் ராஜேஷ், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்எம்எஸ் ஜெயக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அன்னையர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வில்லவராயர் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஜேசையாவில்லவராயர், ஜெயந்தி குரூப் நிறுவனங்கள் பிரகாஷ், ஷோ ஷிப்பிங் ஸ்டீரிமர் ஏஜன்ட்ஸ் கிஷோர், தமிழக கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் மணி, சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டார்.