தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள்குறைகளையும் நாள்கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறுதுறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டா் அறிவுறுத்தினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 12கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். முன்னதாக, கலெக்டா் அலுவலகத்தில், மகளிர்திட்டம் சார்பில் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் விபத்து மரணம் நிதியுதவியாக ரூ.4,40,000/- பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்ட 2மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,03,600/- மதிப்பிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் வீட்டுமனை பட்டா கோாிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். என்று எதிா்பாா்க்கின்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், தனித் துணைஆட்சியர்மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செந்தில் வேல்முருகன், உதவி இயக்குநர் சாந்தி, துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது