தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காமராஜ் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் இருப்பதை காரணமாக காட்டி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், ஒயின் ஷாப் நடத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறியதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கத்துடன் ஒயின் ஷாப்பை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பதாலும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இரு குழுக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த கடையை திறக்க வேண்டும் என்று போராடியவரே தற்போது அதற்கு எதிராக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.