
தூத்துக்குடியில் திமுக தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால் அது ஒருபோதும் நடக்காது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள் திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் வருகிற சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு நிர்வாகிகளும் வாக்காளர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி,மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், எஸ் ஜே ஜெகன், ஜெபதங்கம் பிரேமா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மிக்கேல் அருள் ஸ்டாலின், பாலமுருகன், சுதாகர், குமார் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் ரெங்கசாமி, தொழிலாளர் அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கறிஞர்கள் கிருபாகரன், பூங்குமார் மற்றும் கபடி கந்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.