ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முப்புலிவெட்டி கிராமத்தில் குஜராத் சேர்ந்த அமசோ சோலார் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த சோலார் நிறுவனம் சர்வே எண் 295. 347. 575. 836. 852. 864 ஆகிய அரசு புறம்போக்கு இடங்கள் குளங்கள் ஓடைகள் பொதுப் பாதைகள் மற்றும் ஊர் பொதுமக்களின் பட்டா இடங்கள் ஆகியவற்றில் இடத்தை ஆக்கிரமித்து முள்வேலி அமைக்கப்பட்டு சோலார் அமைத்து வருகிறது. எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று நாங்கள் போய் கேட்டால் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் உடன் பிறந்த சகோதரர் முருகேசன் வெளியூர் ஆட்களை வைத்து மிரட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார். எங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை ஆகையால் சோலார் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்களுடைய பட்டா இடத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எங்கள் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் நாங்கள் வசித்து வருகிறோம் சர்வே எண் 347 சங்க ராஜபுரம் குளம். சர்வே எண் 575 வாணியங்குளம் சர்வே எண் 852 சின்ன மகிபாலன்குளம் சர்வே எண் 864 ஆடு மாடு மேய்ப்பதற்கான மேய்ச்சல் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை மேல லட்சுமிபுரம் சப் ஸ்டேஷன் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சோலார் போஸ்ட் அமைக்கும் பணிகள் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் உடனடியாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் அயிரம் பட்டி முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை மீட்க வேண்டும் ஊர் மக்களுடைய பட்டா இடத்தை மீட்டு தர வேண்டும் என்று முப்புலி வெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு 2000 பேர் கலந்துகொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மீது கிராம மக்கள் பெருந்திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிகழ்வு பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!