தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி ஓன்றிய பேரூர் ஊராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், முன்னிலை வகித்தாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வரவேற்புரையாற்றினாா். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆரம்பிக்கப்பட்ட வரலாறுகளையும் தொடா்ந்து சந்தித்த இடா்பாடுகள் இடையூறுகள் எல்லாம் கடந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த அரசியல் கட்சிகளின் திமுகவின் வரலாறு 76ம் ஆண்டு தொடக்கத்தில் செயல்பட்டு வருகிறது. 5 முறை கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக வளா்ச்சிக்கும் தேசிய அளவிலான அரசியலிலும் தடம் பதித்து வாழ்ந்து மறைந்தாா். அவரது வழியில் அந்த கொள்கைகளை பின்பற்றி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து தோ்தல்களிலும் வெற்றி வாகை சூடி 6வது முறையாக திமுக ஆட்சி அமைத்து எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. இங்கு இருக்கின்ற மாணவா்கள் ஓவ்வொருவரும் திமுக செய்துள்ள சாதனைகளை முழுமையாக தொிந்து கொண்டு தாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒவ்வொருவரும் 50 வாக்குகளை திமுகவிற்கு கொண்டு சோ்க்கும் பணியை இப்போதிலிருந்து தொடங்க வேண்டும். 2026 தோ்தல் தமிகழத்தில் நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. என்ற வரலாற்று சாதனை எழுதுவதற்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் பலா் புதிய வாக்காளா் பட்டியிலில் இணைந்தவா்களாக இருப்பிா்கள் புதிய வாக்காளா் சோ்ப்பின்போது 18 வயது நிரம்பியவா்களை அந்த பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் இன்றைய தலைமுறையினா் தான் நாளைய தலைவா்களாக உருவாகுவாா்கள் அதற்கேற்றாற்போல் அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்றி திமுக 7வது முறையாக ஆட்சி அமைத்தது. என்று பெருமை கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும். என்று பேசினாா். கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், ஆகாஸ்பாண்டியன், கனகவா, பிரதீபா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா, காா்த்தி, மாநகர அணி துணை அமைப்பாளர் ரவி, மற்றும் மணி அல்பட், ஒன்றிய பேரூா் நகர மாநகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகா் வினோத் நன்றியுரையாற்றினாா்.
திமுக வெற்றிக்கு மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கூட்டத்தில் பேசினாா்!!!