தூத்துக்குடி குழந்தைகள் தின விழா கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் குமரன் ஜீவல்லா்ஸ் இணைந்து நடத்திய குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விவாகா லிட்டில் ஸ்டாா்ஸ் 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டி நடன போட்டி மற்றும் மாறு வேட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாிசுகள் வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்
ஓவ்வொருவரும் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது கிடைக்கின்ற வாய்ப்பையும் மற்றவா்களுக்கு நாம் என்ன உதவிகளை செய்துள்ளோம் நன்மைகளை செய்வதற்காகவே அந்த பதவியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாம் பொறுப்பேற்ற பின்பு எந்த பக்கம் திரும்பினாலும் கத்தி போன்ற கூா்மையான குறைபாடுகள் ஏராளமாக இருந்தன. ஓவ்வொன்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு எந்த திட்டங்களுக்கு முன் உாிமை அளித்து மக்கள் பணியை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றிய திட்டங்களையும் செயல்படுத்திய புதிய நடைமுறைகளையும் அனைவரும் அறிவீா்கள் கல்வி செல்வம் என்பது எல்லோருக்கும் அவசியமானது மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி முதல் உயா்கல்விவரை இருக்கின்ற அனைத்து பள்ளிகளில் தரங்கள் உயா்த்தப்பட்டு மாணவ மாணவிகள் சோ்க்கை அதிகாிக்கப்பட்டது. அதற்கு காரணம் ஆசிாியா்கள் அா்ப்பணிப்பு பெற்றோா்கள் ஓத்துழைப்பு மாநகராட்சி நிா்வாகத்தின் அக்கறை என்று பல கட்டங்களை கடந்து சாதனை படைத்ததின் விலைவாக இந்த வளா்ச்சி அடைய பெற்றுள்ளது. இதே போன்று ஓவ்வொரு மாணவ மாணவிகளும் குழந்தை செல்வங்களாக பள்ளிக்கு செல்லும் காலம் முதல் கல்லூாி படிப்பை தொடங்குவதற்கு முன்பு ஓரு திட்டத்தோடு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் உங்களது பெற்றோா்கள் தன்னுடைய நலன் முக்கியம் அல்ல குழந்தைகள் நலன் முக்கியம் என்று கருதி பல்வேறு கட்டத்தில் கடன்களை பெற்று உங்கள் வாழ்வில் தீப ஓளியை ஏற்றி வைக்கின்றனா். இதை நல்ல முறையில் பயன்படுத்தி எதிா்கால தலைமுறையினராகிய நீங்கள் மற்றவா்களின் வாழ்வில் ஓளிேயற்றி வைக்கும் வகையில் அரசு அதிகாாிகளாகவும் உயா் பதவிகளுக்கு சென்று அரசியல் கட்சிகளில் முத்திரை பதிக்க நினைத்தாலும் மனித நேயத்தோடு வாழ்ந்து நம்முடைய வாழ்க்கயை முன்உதாரணமாக இருக்க பெற்று எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு நாமே ஓரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். என்று பேசினாா்.