தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் தொடர்ந்து மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர் முன்பு இருந்த ஆட்சியாளர்களும் மாநகராட்சி மேயரும் கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தனர்
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது இதனை அடுத்து அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உள்ளாட்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
இதனையடுத்து மாநகராட்சி பகுதியான கோக்கூர். பி என் டி காலனி. ராஜீவ் நகர். கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்ததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் குளம் அமைக்க அப்போதைய தமிழக அரசு உத்தரவிட்டு அதன் அடிப்படையில் 74.70 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுபோல சங்கர பேரி. மச்சாது நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியதை அடுத்து மச்சாது நகரில் உள்ள உரக்கிடங்கு அருகில் சுமார் 75 லட்சம் மதிப்பில் குளம் ஒன்று அமைக்கப்பட்டது குளம் பணிகள் முடிவடைந்து தற்போது அது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கோக்கூர் குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைப்பயிற்சி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது இதனால் அந்தப் பகுதியில் உள்ள மழை நீர் இந்த குளத்திற்கு வந்து தேங்கி கொள்ளும் குளம் நிரம்பி உடன் வெளியே வடிகால் வழியாக செல்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது அதுபோல இந்த குளத்தைச் சுற்றி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பொழுதுபோக்கு வகையில் பூங்காக்களும் பொதுமக்கள் அமர்ந்து இருக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் தற்போது பெய்த மழையினால் இந்த பகுதியில் மழை நீர் தேங்கவில்லை. அதுபோல அம்பேத்கர் நகர் ஸ்டெம்பார்க் அருகில் 306.60 லட்சம் மதிப்பீட்டில் மிகப்பெரிய குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த குளம் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்து அங்கு மழை நீர் தேங்கியுள்ளது இந்த குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அமர்ந்து பொழுது போக்கும் வகையில் இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது பூங்காக்களும் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் மழைக்காலத்தில் தொடர்ந்து மழைநீர் தேங்கி வந்தது. தற்போது அந்த குளம் அமைக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் உள்ள மழை நீர் எல்லாம் அந்த குளத்தில் வந்து சேர்ந்து விடுவதால் அப்பகுதி முழுவதும் தற்போது மழை நீர் இல்லாமல் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஏற்பாட்டில் அம்பேத்கார் நகர் பகுதியில் புதியதாக ஒரு குளம். கோக்கூர் பகுதியில் புதியதாக ஒரு குளம் அதுபோல மச்சாது நகரில் புதியதாக ஒரு குளம் ஆகிய மூன்று குளங்கள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் எந்த ஒரு மழை நீரும் தேங்க கூடாது என்ற எண்ணத்தில் மழைக்காலத்துக்கு முன்பே பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்து உள்ளதால் மக்கள் மழை நீர் தேங்காமல் தற்போது இயல்பு வாழ்க்கை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த ஹரிஹர கிருஷ்ணன் கூறுகையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கடும் முயற்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இந்த குளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டனா். தற்போது மக்களுக்கு இந்த குளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது இரண்டு நாட்களாக பெய்த மழையால் எந்த ஒரு பாதிப்பும் எங்கள் பகுதியில் இல்லை கதிர்வேல் நகர் கோக்கூர். கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் முற்றிலும் தேங்கவில்லை இந்த குளம் நிரம்பியவுடன் வடிகால் வழியாக பக்கிள் ஓடைக்கு சென்று கடலுக்கு செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதுபோல சமூக ஆர்வலர் மாஸ்டர் செல்வம் கூறுகையில் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் முழுவதும் மழை நீர் தேங்கி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம் இங்கு குளம் அமைக்க வேண்டும் என்று இங்கு குளம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் இந்தப் பகுதியில் மழை நீர் எங்கும் தேங்கவில்லை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல வருடங்களாக நாங்கள் இந்த பகுதியில் மழைக்காலங்களில் பல மாதம் வெளியே வர முடியாத அளவில் மழை நீரில் தான் குடியிருந்து வந்தோம் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தன்னுடைய முயற்சியால் மாநகரில் அம்பேத்கார் நகர். மச்சாது நகர் கோக்கூர் ஆகிய மூன்று இடங்களில் குளம் அமைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் தற்போது குளத்தில் தேங்கியுள்ளது இதற்காக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 450 லட்சம் மதிப்பில் மூன்று குளங்கள் அமைக்கப்பட்டு அதனை சுற்றி பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி பொதுமக்கள் அமர்ந்து பொழுது போக்கும் வகையில் இருக்கைகள் பூங்காக்கள் சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் இரவை பகலாக்கும் வகையில் நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்்ஸ்: கடந்த காலங்களில் பெய்த மழையால் சுமாா் 30 நாட்கள் வரை பல பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீருக்கு தீா்வு கண்ட முன்னாள் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கனிமொழி எம்.பி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோருக்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி எல்லா பகுதிகளிலும் நடைபெற்றள்ள பணிகளுக்கு இரவு பகல் கொட்டும் மழை என பாராமல் மக்கள் நலன் முக்கியம் என்று பணியாற்றி வரும் மேயா் ஜெகன் பொியசாமிக்கு அனைத்து தரப்பினரும் தற்போது பாராட்டுக்களை தொிவித்து வருகின்றனா்.