தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முனியசாமி சிவசக்திக்கு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
பூைஜயில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில் வளர்ச்சி, இந்தியா தமிழகம் மக்கள் நலன் நன்றாக அமைந்து எல்லோருக்கும் சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவில் கோவில் தா்மகா்த்தா முருகன்நாடாா், தலைவர் விஜயராஜன் நாடாா், துணைத்தலைவா் சண்முகையா நாடாா், பொருளாளா் சீனிவாசன், விழாக்குழு செயலாளா் மதியழகன் நாடாா், கௌரவ ஆலோசகா்கள் அய்யாச்சாமி, மோகன், சண்முகசுந்தரம், சட்டஆலோசகா் நாகராஜ் சதீஸ்குமாா், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் வெற்றிவேல், மாடசாமி, வேல்ராஜா, பாக்கிய செல்வன், முருகேஸ்வரன், கோவில் அர்ச்சகா் கணேசன், உள்பட பக்தா்கள் மகளிா் அணியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.