தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரவிளையில் உள்ள கழக அலுவலகத்தில் வைத்து தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் ஏற்பாட்டில் சாக்லேட் மாலை அணிவித்து, கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி சண்முகநாதன், ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் திருப்பதி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சகாயராஜ், சொக்கலிங்கம், மற்றும் ராஜூ, பாலஜெயம், சாம்ராஜ், தளவாய் ராஜ், சிதம்பரம், உதயகுமார் உள்பட பலா் உடனிருந்தனர்.