தூத்துக்குடி டிஎன்பிஎஸ்சி குரூப் – II / IIA காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, போட்டித்தேர்வு மாணவர்களுக்கான இலவச மாதிரித்தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
இத்தேர்வில் 200 வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தன. மாதிரித்தேர்வில் 85 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், முதல்நிலை நூலகர் ராம்சங்கர், நூலகர்கள் லதா, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.