தூத்துக்குடி
எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலையும் பிரார்த்தனையும் நடைபெற்றது.
இறுதிநாள் திருவிழா தூய தோமையார் கல்வி குழுமம் தாளாளர் அருட்பணி. அமலன் தமியான் தலைமையில், தூய தோமையார் திருத்தூதர் ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் அருட்பணி. இண்பேன்ட், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி. செல்வன் பெர்னான்டோ ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை சிறப்பித்தனர். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை கொண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து. அன்னையின் திருவுருவ சப்பர பவனியும், அசன விருந்தும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.