தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் முதல்வா் விஜய், மற்றும் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக கட்டப்பட்ட ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தினமும் 10,000 பேர் பயன்படுத்தும் பேருந்து நிலையத்திற்குள் கட்டப்பட்ட வணிக வளாக கடையை, ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் பலர் தின வாடகைக்கு உள்ளூர் வியாபாரிகளுக்கு உள் வாடகை வைத்து கடையை மாநகராட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். மேலும் வியாபாரிகள் போட்டி போட்டு வியாபாரம் செய்து உள் வாடகை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தரமற்ற நிலையில் உணவுப் பொருட்கள், தேன், ஆடைகள், கவரிங் பொருட்கள், செருப்புகள் விற்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி இல்லையெனில் தரமற்ற பொருட்கள் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால் தாங்கள் இதை சிறப்பு கவனத்துடன் எடுத்து ஆய்வு செய்து மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வணிக வளாகங்களையும் உள்வாடகை கொடுத்து நடத்தி வரும் வியாபாரிகளுக்கே கொடுத்து வாடகையை முறைப்படுத்தி வழங்கிடவும், புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலையத்து கடைகளும், அங்கு வந்து போகும் மற்ற பேருந்து மற்றும் வாடகை கடை நடத்தி வரும் உரிமையாளர்கள் பட்டியல்களையும் ஆய்வு செய்து ஒழுங்குபடுத்திடவும் வேண்டுகின்றேன். மேலும் டீடிசிபி துறைக்கு மாநகராட்சி எல்லைக்குள் கடந்த 4.5 ஆண்டுகளில் மனைப்பிரிவாக மாற்றப்பட்ட லேஅவுட் களில் மக்கள் குடிவந்து இல்லாத நிலையில் பாதாள சாக்கடையும், குடிநீர் பைப்புலைன் மற்றும் மாநகராட்சி நிதியை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்று முழுமையான ஆய்வு செய்து தவறுகள் கண்டு அறிந்து, இடம் யாருடைய அனுமதியின் பெயரில் செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டறிந்து, அதில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது சட்டபடி நடவடிக்கை ஏற்படுத்தி தீர்வுகாண வேண்டும் மேலும் வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் டவுன் சர்வே எனப்படும் சர்வே அதிகாரத்தின் கீழ் மாநகராட்சியின் பல பகுதிகள் எவ்வித ஆவணங்கள் இன்றி டிஎஸ்எல்ஆர் வழங்கப்பட்டு வருகிறது. இதையும் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும் மேலும் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள், வெளியூரில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் பேருந்துகள், மதுரையை நோக்கி செல்லும் திசையில் வெளியேறும் போது சாலையின் இடதுபக்கத்தில் உள்ள மாநகராட்சி சைக்கிள், பைக் ஸ்டாண்ட் மற்றும் அதற்கு அடுத்தப்படியாக இருக்கக்கூடிய கடையும், அதன் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய கூட்டுறவு ஆவின் கடை, முதல்வர் மருந்தகம் வரை சாலை குறுகலாக இருப்பதாலும் 3-ம் கேட் மேம்பாலத்தில் இருந்து மதுரையை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மினிபஸ் மற்றும் ஆம்னி பேருந்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நிலையில் இருசக்கர வாகன விபத்துக்களும் அடிக்கடி நடைபெற்றுவிட்டன. அதே நேரத்தில் பாலம் அமைந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரையும் சிக்னலில் இருந்து பாலத்தின் மத்திய பகுதி வரை கனரக வாகனங்கள் தேங்கி நின்று செல்வதால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே கூட்டுறவு துறையில் உள்ள நிலத்தையும் மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் நிலத்தையும் மற்றும் அதன் தொடர்ச்சியாக உள்ள நிலங்களையும் தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்த நில மாற்று சட்டப்படி உரிய நில இழப்பீடு வழங்கி சாலையை விரிவாக்கம் செய்திடவும் அதில் அமைந்துள்ள சிக்னலை அப்புறப்படுத்தி ஏவிஎம் திருமண மண்டபம் மற்றும் சுசி பெட்ரோல் நிலையம் இருக்கும் இடத்தில் உள்ள நான்கு முனை சந்திப்புக்கு மாற்றி உடனடி நடவடிக்கை எடுத்திடவும், நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிர்புறம் மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறாக உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் கே.டி.சி. நகர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகிய இரண்டையும் அப்புறப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்திடவும் இதனால் பாதிப்புக்குள்ளாகும் குறுக்கு வழி இணைப்பு சாலைகளுக்கு மாற்று வழி கண்டு அறிந்து உயிர்சேதம் இல்லாமல் மக்கள் பயணிக்கும் திட்டத்தை அமல்படுத்தி மாநகர மக்களின் துயரத்தை துடைத்திட உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்று முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிக்கு சில ஓழுங்கு நடவடிக்கை எடுக்க கோாி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ் கலெக்டா் விஷூ மகாஜனுக்கு கோாிக்கை