Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன கடைமடை வரை தண்ணீர் திறக்க வலியுறுத்தி வரும் 27ம் தேதி மறியல் போராட்டம்

Last updated: August 24, 2026 11:16 am
Tamilagapuratchi
Share
SHARE

சாயர்புரம், ஆக.24-

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகளில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டும் வடகால் பாசனப் பகுதி கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் சென்றடையாததால் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வடகால் பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து பேய்குளம் நில சுவான்தார்கள், விவசாயிகள் அபிவிருத்தி சங்க செயலாளர் ஜெய பொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:

 

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால் வாய்க்கால் மூலம் பேய்குளம், குலையன்கரிசல், கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாசனக் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தப் பகுதிகளை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

 

வடகால் வாய்க்கால் மூலம் சுமார் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 250 கன அடி நீரும், பாபநாசம் அணைக்கட்டில் இருந்து 1,250 கன அடி நீரும் கடந்த 20 நாட்களாக வெளியேற்றப்படுகிறது.

 

கடைமடை பாசன பகுதிகளான ஸ்ரீவைகுண்டம் வடகால் பேய்குளம், குலையன்கரிசல், பெட்டை குளம் மற்றும் கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. பனை மரங்கள் பட்டுப்போகும் நிலையில் உள்ளது.

 

கடைமடை பாய்மானத்திற்கு முன் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குடிநீருக்கு 120 கன அடி தண்ணீர் தான் தேவை. இரு அணைகளில் இருந்தும் சுமார் 1,500 கன அடி நீர் திறந்தும் கடைமடை பாய்மானத்திற்கு தண்ணீர் வரவில்லை. விவசாய நிலங்கள் தவிர்க்கப்பட்டுக்கொண்டே போனால் தங்களுக்கும் இதன் பெரும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் போராட்டங்களை நடத்தித்தான் விவசாயத்திற்கு தண்ணீர் பெற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்து போவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

 

எனவே, ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் தர வலியுறுத்தி வரும் 27ம் தேதி புதுக்கோட்டை தட்டப்பாறை விலக்கு அருகில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்
Next Article தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்கள் சங்க புதிய தலைவர்- செயலாளர் தேர்வு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?