Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

Last updated: August 1, 2026 6:52 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மாநகராட்சி மேயர் சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டுக்கு சென்று விட்டார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை ஆகையால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.

 

இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடியின் வரலாறு பற்றி அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை தெருக்கள். எத்தனை குறுக்கு சந்து உள்ளது என்று கூட தெரியாத அமைச்சர் நிர்மல்குமார் மாநகராட்சியை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது மாநகராட்சி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு தூத்துக்குடி மாநகரிலேயே 15 நாட்களுக்கு மேல் தங்கி முகாமிட்டு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நோில் பாா்வையிட்டு பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

 

அதுபோல் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முகாமிட்டு வெள்ளப் பாதிப்பு பணிகளை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கையும் நோில் எடுத்தனா். அதுபோல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்டம் முழுவதும் வெள்ளப்பாதிப்புக்குள்ளான இடங்களை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கையும் போா்கால அடிப்படையில் எடுத்து வந்தார். 2021ம் ஆண்டுக்கு முன்பு பலமுறை தூத்துக்குடி மாநகருக்கு வெள்ளம் வந்தபோது அப்போதெல்லாம் பொதுமக்கள் மழை வெள்ள நீரில் ஆறு மாதத்துக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வந்தனர். அதுவும் குறிப்பாக அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில் தூத்துக்குடி மாநகரில் பலமுறை வெள்ளம் ஏற்பட்டது அந்த சாதாரண வெள்ளத்தில் கூட மக்கள் பல மாதம் பாதிக்கப்பட்டனர் ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 100 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட பெரு வெள்ளம் தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்ட போது ஒரு மாதத்திற்குள் முழுவதும் சரி செய்யப்பட்டது இந்த வரலாறு கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது 53 பூங்காக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக மட்டும் மூன்று மகளிர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணிக்கு சாதாரண மக்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி சார்பில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த படிப்பகத்தில் படித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கிப் பணிக்கு சென்றுள்ளனா். அதுபோல் அரசு பணிக்கும் பலா் சென்று உள்ளனர் என்பதை அமைச்சர் நிர்மல்குமார் உணர வேண்டும்.

மேலும் ஏழு குளங்கள் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதால் தற்போது மாநகராட்சி அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதுபோல திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை காலத்தில் குடிநீருக்காக தினசரி அனைத்து பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்று வந்தது குடிநீர் என்பது அரியதாகவே கிடைத்தது ஆனால் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்பு தான் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு தற்போது 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் நிர்மல்குமார் உணர வேண்டும் உங்களுடன் மேடையில் இருந்த பல்வேறு கட்சிக்கு சென்று வந்த நபர்கள் கூறிய தவறான தகவல்களை நீங்கள் தெரிவிக்க வேண்டாம் முதலில் நீங்கள் மாநகராட்சி முழுவதும் சுற்றி வந்து பாருங்கள் பொதுமக்கள் நன்மை கருதி எந்த அளவுக்கு மாநகராட்சி சாா்பில் பணிகள் நடைபெற்று வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

முதலில் நீங்கள் பொறுப்பு வகிக்கும் மின்சாரத் துறையில் பல்வேறு குறைகள் குறைபாடுகள் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும் உதாரணத்துக்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பின்பு பாதிக்கப்பட்டுள்ளது அதனை முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார வாரிய தொழிலாளராக எங்களை அறிவிக்க வேண்டும் என்று உங்களை சந்தித்து மனு அளித்த தொழிலாளர்களுக்கு எந்த வாக்குறுதியும் நீங்கள் கொடுக்கவில்லை ஏன் அதுபோல தெர்மல் நகர் அனல் மின் நிலையத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கழிவுகள் சாம்பல்கள் கடலில் கலப்பதால் மீன் வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது அது போல உப்பளமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை எல்லாம் நீங்கள் சரி செய்து விட்டு மாநகராட்சி பற்றி பேசுவதற்கு நீங்கள் வாருங்கள் வரலாறை தெரிந்து கொண்டு முதலில் பேச வேண்டும்

அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து கட்சிக்காகவும் மாவட்டத்திற்காகவும் பல்வேறு வளர்ச்சிகளுக்காக பாடுபட்ட பலனாகத்தான் அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞரால் முரட்டு பக்தன் என பட்டம் என் தந்தைக்கு கொடுக்கப்பட்டது உங்களைப் போல பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த உங்களுக்கெல்லாம் அந்த வரலாறு பற்றி தெரியாது என அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை
Next Article தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர். அமைதியாக சாதித்து காட்டிய மேயர் ஜெகன் பொியசாமி

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?