தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் தலைமையில் சென்னையில் அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பணையூாில் நடைபெற்றது.
அப்போது மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் இணைந்த பலருக்கும் கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தெற்கு மாவட்ட அதிமுக ஜெ பேரவை இணைச்செயலாளரும் வட்டச்செயலாளருமான திருச்சிற்றம்பலம் அக்கட்சியிலிருந்து விலகி தவெக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா். மாியாதை நிமித்தமாக அமைச்சா் புஸ்சி ஆனந்தை சந்தித்து வாழ்த்துபெற்றாா். அப்போது கட்சிபணிகளை சிறப்பாக செய்திட வேண்டும் பொறுப்புகள் உங்களை தேடி வரும் என்று கூறினாா். அப்போது முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு, சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.