தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில் வைகாசி மாத தேய்பிறை அட்டமி பூஜை காலபைரவருக்கு பால் தயிர் சந்தணம் பன்னீர் மஞ்சள் குங்குமம் உட்பட அபிேஷகம் மற்றும் யாகம் சீனிவாசசித்தர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அரசு நல்ல முறையில் நடக்க வேண்டியும் மற்றும் உலக அமைதி வேண்டி பக்தர்கள் அனைவரும் ஒரு நிமிடம். பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.