நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, ஆதி திராவிடர் நல அணி தலைவர் பெருமாள், மாநகர அமைப்பாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி , கந்தசாமி, வழக்கறிஞர் ஆனந்த் காபிரியேல், இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.ரவி, வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், பாலகுருசாமி, சிங்கராஜ், வட்ட பிரதிநிதிகள் ரவி துரை, பாஸ்கர், ஜேசுபாலன், சரவணன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலா, பகுதி துணை செயலாளர் சங்கர், விளையாட்டு மேம்பாட்டு அணி சில்வர்ஸ்டர், வட்ட துணை செயலாளர் காளியப்பன் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 103வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.