தூத்துக்குடி அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சுமார் 50 ஆண்டுகளாக கட்டிக் காத்து தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் தலைநிமிரச் செய்த மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞருடைய 103 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் ஆணைப்படி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை தலைமையில் கலைஞரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினா். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் வரவேற்புரையாற்றினாா்.
பின்பு சிலுப்பட்டியில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், முன்னோடிகள் ஜெயராஜ், மைக்கேல் ராஜ், தர்மலிங்கம், சந்தன ராஜ், ஜோதிடர் முருகன், ஆசைத்தம்பி, பொன்ராஜ், மைக்கேல் துரை என்ற குரூஸ், தொம்மை சேவியர் கிளைச் செயலாளர்கள் சண்முகத்தாய், பொன்னுச்சாமி, ஞானபிரகாசம் என்ற கிராஸ், ராமர், ஆனந்தராஜ், காசி, மகாராஜா, திருமணி, முருகன், இம்மானுவேல், சக்தி, ஒன்றிய இளைஞரணி அருள் பாரி, கிங்ஸ்டன், இளம் பேச்சாளர் கார்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.