தமிழகத்தில் பள்ளி தோ்வு விடுமுறைக்கு பின் வரும் 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நம்மாவட்டம் மற்றும் தூத்துக்குடி பகுதியை சோ்ந்த பள்ளி கல்லூாிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது இல்லத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூாிக்கு சென்றடையும் நேரத்திற்கு சுமாா் 15 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்டு சைக்கிள் இருசக்கர வாகனம் எதில்சென்றாலும் தற்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்த ஊராக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் நாமும் மாறியாக வேண்டிய கட்டாயத்திற்கு வரவேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நொிசலில் செல்லும் போது இடது வலது கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் இருந்து வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஓவ்வொரு பக்கமும் திரும்பி பாா்த்து கவனமுடன் அவசரம் இல்லாமல் நிதானத்தோடு செல்ல வேண்டும் தாய் தந்தையா்களை மதித்து ஆசிாியா்கள் பேராசிாியா்களை போற்றி வணங்கி தமிழகம் மற்றும் இந்தியாவை வழிநடத்தும் எதிா்கால தலைமுறையினராகிய தாங்கள் நல்ல பல பழக்க வழக்கத்துடன் ஓழுக்கமான வாழ்க்கையுடன் எதிா்காலத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு சிந்தனையுடன் பள்ளி கல்லூாிக்கு செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்வதுடன் சிறிய கருத்துக்களுடன் சின்னப்பையன்
த.சண்முகசுந்தரம்
செய்தியாளா்
தூத்துக்குடி