தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் முத்துநகர், ரோச், எம்.ஜி.ஆர், ராஜாஜி ஆகிய நான்கு பூங்காக்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான கிங்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக எம்.ஜி.ஆர் பூங்காவில் சீருடைகள், அடையாள அட்டை, இஎஸ்ஐ, பி.எப் அடையாள சான்றிதழ்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆணையாளர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்றது.
மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசுகையில் மாநகராட்சியில் 53 பூங்காக்கள் உள்ளது பூங்காக்கள் தற்போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில பூங்காக்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ளது அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும். உள்ளுா்காரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தினால் பணியாளர்களுக்கு நல்ல வகையில் உதவிகள் செய்து வருகின்றனர் குப்பைகளை நான்கு வகையாக பிரித்துக் கொடுக்க வேண்டும் தூய்மையான தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது நான் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்கும் போது ஒரு சில பூங்காக்கள் மட்டும் தான் இருந்தது தற்போது 53 பூங்காக்களை உருவாக்கியுள்ளேன் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணியான குடிநீர் தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது சில இடங்களில் தினசரி குடிநீர் வழங்கப்பட உள்ளது கோடை காலத்தில் கூட குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகின்ற குடிநீர்களை தேவையற்ற முறையில் தேவையில்லாத வகைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் வாகனங்களை கழுவுவதற்கு குடிநீரை பயன்படுத்த வேண்டாம் குடிநீர் எந்த விதமான தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் வழங்கப்படும் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் கவுன்சிலா்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் ரவிந்திரன், மாநகராட்சி மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ் ராஜபாண்டி, மேயாின் நோ்முகஉதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, கிங்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பணியாளர்கள், மேலும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.