தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற 6 நாட்களிலேயே, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் வைக்க தொடங்கி உள்ளனா் புதிய அரசு பொறுப்பேற்ற 140 மணி நேரத்திற்குள் மாநிலம் முழுவதும் 24 கொலைகள் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்ற அரசு சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை இதன் காரணமாக, காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிய ரவுடிகள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கினர். இந்த நிர்வாகக் குளறுபடியே தற்போதைய தொடர் கொலைகளுக்கு முக்கியக் காரணம் முக்கியமாக நடந்துள்ள 24 கொலைகளில் 12-க்கும் மேற்பட்ட கொலைகள் கஞ்சா மற்றும் மதுபோதையினால் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக தரப்பு புகார்களை கூறியுள்ளது.
கடந்த மே 11 முதல் மே 15, 2026 வரை 6 நாட்களில் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அருண் 38 என்ற மீனவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே அதிகாலையில் கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா 40 என்ற பெண், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையின் பின்புறம் பலத்த காயம் இருந்தது. இது குறித்து வெளிப்பாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிருந்தா தேவி 32 என்ற பெண் மே 12 அன்று காணாமல் போனார். சிப்காட் போலீசாரின் சிசிடிவி ஆய்வில், அவர் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. விசாரணையில், மாரிமுத்துவின் மனைவி சரவணபிரியா, பிருந்தா தேவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்தது அம்பலமானது. உடலை சாக்கு மூட்டையில் கட்டி, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் புதைத்துள்ளனர். வியாழனன்று உடலைத் தோண்டி எடுத்த போலீசார், ‘காணாமல் போன வழக்கு’ என்பதை ‘கொலை வழக்காக’ மாற்றி, கணவன்-மனைவி உட்பட மூன்று பேரைக் கைது செய்தனர். காரக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஐயப்பன் 30 என்ற போதைக்கு அடிமையான வாலிபர், தனது வயதான தாத்தா பிச்சைமுத்து 72 மற்றும் பாட்டி சந்திரா 66 ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்ததால் இருவரையும் அடித்து மயக்கமடையச் செய்து, பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியுள்ளார். மன்னார்குடி போலீசார் ஐயப்பனைக் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள நங்கநல்லூர் குடியிருப்பில், சமூக ஊடகப் பிரபலம் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் இரு உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் மூதாட்டியைத் தாக்கி, அவரது தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 19 வயது வாலிபரைச் சென்னை ரயில்வே போலீசார் தீவிரக் கண்காணிப்பு மூலம் கைது செய்தனர். சென்னையில் முதிய தம்பதியரை இலக்கு வைத்து, அவர்களுக்குத் தெரிந்த நபர்களே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து உபசரித்துள்ளனர். அவர்கள் மயங்கியதும் வீட்டில் இருந்த பெரும் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை மாநகர போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். பூந்தமல்லியைச் சேர்ந்த 67 வயது ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி ஏதுமின்றி, சட்டவிரோதமாகப் பின்னணியில் கணக்குகளை இணைத்து ₹14.65 லட்சத்தை அள்ளிய சைபர் கொள்ளையை ஆவடி சைபர் கிரைம் பிரிவு முறியடித்தது. வடமாநில மோசடிக் கும்பலுக்கு வங்கிக் கணக்குகளைத் தந்த தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஊழியரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, இணையதளத்தில் பதிவேற்றி மிரட்டியதாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஐடி ஊழியரைச் சென்னை சைபர் விங் போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், சென்னை மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விரலில் தேர்தல் மை வைக்கப்பட்டிருந்த, போலி இந்திய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை, பிரிட்டிஷ் மற்றும் கனடா குடியுரிமை பெற்ற 25-க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களை குடியுரிமை மற்றும் மாநில அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் குறிப்பிட்ட சில குற்ற நிகழ்வுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ள நிலையில்.. மாநிலம் முழுவதும் 24க்கும் அதிகமான கொலைகள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது