ளதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்புளியங்குளம் பகுதியை சேர்ந்த முத்துசாலினி முதுகலை பொறியியல் பட்டதாரியான இவரும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ், முத்துசாலினியை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை உடலுறவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முத்துசாலினியுடன் பேசுவதை சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸுக்கு இன்னும் இரண்டு நாட்களில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் விரக்தி அடைந்த முத்துசாலினி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சுபாஷ் சந்திர போஸின் வீட்டின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய முத்து சுபாஷை தான் திருமணம் செய்வேன் எனக்கூறி, அங்கு முத்துசாலினி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் முத்துசாலினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் முதல் கட்டமாக சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய முத்துசாலினி, நாங்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை வைத்து தற்போது ஏமாற்றிய சுபாஷ் சந்திரபோசை தான் நான் திருமணம் செய்வேன் எனவும், அப்படி இல்லை என்றால் அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.