
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், கவுன்சிலா்கள் இசக்கிராஜா, சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன்பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்த பெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், கணேசன், ராஜேந்திரன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் நலம் ராஜேந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, ஹரிசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி பரத், நெசவாளர் அணி இசக்கிதுரை, பாக முகவர்கள் ஞானபிரகாசம், ராஜ்குமார், வட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.