புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு 11.10.2025, 12.10.2025 தேதிகளில் தீயணைப்பு துறையினரால் “தீ பாதுகாப்பு மற்றும் அவசர நிலை மேலாண்மை” குறித்த மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் நிலைய அலுவலர் மு. சரவணன் அவர்கள். நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தீ அணைக்கும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மற்றும் மக்கள் தங்களது வீடு, அலுவலகங்களில் தீ பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது அத்துடன், தீயணைப்பு வீரர்கள் நேரடியாக செயல்முறை காட்சியையும் (demonstration) வழங்கினர். பொதுமக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று பல கேள்விகளையும் கேட்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில், மக்கள் அனைவரும் தீ பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், அவசர காலங்களில் 101 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைக்க வேண்டும் என்பதையும் நிலைய அலுவலர் மு. சரவணன் அவர்கள் வலியுறுத்தினார்.
புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு : நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.