பத்திரிகை உலகில் அழியாத சேவையை ஆற்றிய பத்ம ஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில், வ.உ.சி. மார்க்கெட் எதிரே உள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரவி சேகர், மாவட்ட பொருளாளர் குமார், மாநில துணைத் தலைவர் கணேசன், மாநகர தலைவர் புஷ்ப ராஜா, மாநில செயலாளர் சண்முக வேல், அலாட் குமார், சக்தி மதுரை, பாண்டி, சிவக்குமார், வரதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.