தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தியும் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால்


காவல்துறையினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு எஸ்.பி மாரியப்பன் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது பெருந்தலைவர் காமராஜர் தனது அரசியல் பொதுவாழ்வில் நேர்மையாய் வாழ்ந்து இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு தியாகத்தின் திருவுருவமாக திகழ்ந்தவர். அவரை ஏசி அரை இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறியது உண்மைக்கு புறம்பானது.அதுவும் தான் மரணிக்கும் போது கலைஞர் கருணாநிதி இடம் காமராஜர் தமிழகத்தை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக கலைஞர் தன்னிடம் கூறினார் என திருச்சி சிவா கூறியது பொய்யும், புரட்டுமான ஆதாரம் அற்ற பேச்சு ஆகும்..இதனை கண்டித்தும், திருச்சி சிவா உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் வருகின்ற (21/7/2025) மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் எனவே சமூக மேற்கொண்ட இடத்தில் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் ஒலிபெருக்கி அமைக்கவும் அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு எஸ்.பி மாரியப்பன் அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.