தூத்துக்குடி,
ஜூலை 18
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திமுக எம்பி திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் கூறினார்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆதாரமற்ற முறையில் அவதூறு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா பேச்சால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி திருச்சி சிவா அவருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் நாவடக்கம் தேவை காமராஜர் பற்றி பேசிய ஆதாரமற்ற அவதூறுகளுக்கு திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் சார்ந்த கட்சி தலைமையும் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் கேட்க விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆவேசமாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல்.
காமராஜர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள்? அவர்கள் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது? அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் யார் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
எதை பேசுகிறோம்? என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா? என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா திருச்சி சிவா போன்ற தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது
தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில் ரஷ்ய நாட்டுக்கு சென்ற போது கூட வேட்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர்.
அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பது நாடறியும் திருச்சி சிவாவும், அவர் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமையும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி தமிழ்நாட்டில் மாபெரும் தொடர் போராட்டம் நடைபெறும் என இதன் வாயிலாக கடும் கண்டனத்தை
எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்தார்.