Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!

Last updated: November 23, 2025 10:54 am
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அய்யனடைப்பு ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 220 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் வி.எஸ்.கிருஷ்ணசாமி வரவேற்புரையாற்றினார்.

கனிமொழி எம்.பி. குடியிருப்பை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கி பேசுகையில்: 220 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி, திறக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எல்லாருக்குமே ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும். நம்முடைய வீடு, நம்முடைய இடம் என்ற ஒரு கனவு இருக்கும். நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு கிட்டத்தட்ட 200 நபர்களுக்கு மேல் அவர்களின் இந்த கனவை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். எனவே, உங்களுக்கே மறக்க முடியாத ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

‘அனைவருக்கும் வீடு’ வசதித் திட்டம் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் பிரிவின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு பகுதியில் தரைதளத்துடன 4 மாடிகளை கொண்ட 220 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.20.03 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

இந்த பணிகள் நீண்ட காலத்துக்கு முன்னால் தொடங்கப்பட்டு, அதை திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளை துரிதப்படுத்தி, இன்றைக்கு அந்த பணிகள் எல்லாம் நிறைவடைந்து இந்த வீடுகள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் கீதாஜீவன் சொன்னது போல், அடிப்படை வசதிகள் எல்லாம் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வீட்டை நாம் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும், பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, இந்த வீடுகளை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அதைச் சரிவர பராமரிக்கவும் வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி கட்டுமான பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதியில் தார் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு முறைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய 2 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் தலா 50,000 லிட்டர் கொள்ளளவுடன் கட்டப்பட்டு ஊராட்சி மூலம் குடிநீர் வசதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு 1,66,000 லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப்பகுதியில் பயனாளிகள் தங்கள் பங்களிப்புத்தொகையாக ஒரு குடியிருப்பிற்கு முறையே ரூ. 1,13,100 மற்றும் ரூ.100,000 கட்ட வேண்டும் என கனிமொழி எம்.பி. பேசினார்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் திமுக ஆட்சி பொறுப்பெற்ற பின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 2023ல் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்றது. ஏற்கனவே, ரூ.1.13 லட்சம் மக்கள் பங்களிப்பை நிர்ணயித்திருந்த நிலையில் கூடுதலாக எதுவும் கேட்க கூடாது என்று முதலமைச்சர் உத்திரவு பிறப்பித்தார். அரசின் திட்டத்தின் மூலம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். நம்முடைய வீடு போல் இதை பாதுகாத்து எல்லோரும் ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து திமுக அரசிற்கு என்றும் துணையாக இருக்க வேண்டும். இந்த அரசு உங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்து கொடுக்கும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தாசில்தார் திருமணி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் மகாராஜா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், உதவி செயற்பொறியாளர் ரவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் ஏஞ்சல் ஜெனிட்டா, நாராயணன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தெற்கு மாவட்ட திமுக சமூக வலைதள அமைப்பாளர் மீனாட்சி, கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் பொன்னரசு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வரலெட்சுமி, மகளிரணி விஜி, சித்ரா, ஜெனிட்டா, கிளை செயலாளர்கள் சார்லஸ், சின்னதுரை, ஆல்வின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மற்றும் மணி, கப்பிகுளம் பாபு, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மாடசாமி நன்றியுரையாற்றினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!
Next Article தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா்!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மார்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் விநாயகா் சிலை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று விஜா்ஜனம் செய்யப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில் முருகன் இல்ல விழா : பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மழைநீர் தேங்கியதை ஆய்வு மேற்கொண்டாா்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?