பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று 15.07.2025 காலை 7 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு சார்பில் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் காமராஜர் சிலை முன்பு கேக் வெட்டி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குலையன்கரிசலில் உள்ள காமராஜர் சிலைக்கும் தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் காமராஜர் சிலைக்கும், தமிழ் சாலையில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கும்,பழைய மாநகராட்சி காமராஜர் சிலைக்கும், தருவைக்குளம் பகுதியில் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதுபோல் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக், ஸ்கூல் யூனிபார்ம், போன்ற கல்வி உபகரணங்கள் ஏராளமாக வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் சிலை அருகே அறுசுவை அசைவ விருந்து மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மெகா அன்னதானத்தை நிறுவனத் தலைவர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய சொந்தங்கள், ஊர்பெரியவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ.லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி.ரவிசேகர்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மாநிலச் செயலாளர் சண்முகவேல், மாநில துணைத்தலைவர் எம் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வி நிறுவன தாளாளர் மில்லை ஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கணேசன், தொழிலதிபர் மாஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சக்தி நாராயணன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா,பெணிட்டோ, காமராஜர் நகர் கதிர் என்ற சத்திய தாஸ், ரஞ்சித் அழகுதுரை, கோல்டன் ஸ்டீல் குமார் ஜேக்கப், கிறிஸ்டோபர், கார்த்திக், நட்டாத்தி ஒன்றியம் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.