தூத்துக்குடி தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் தூத்துக்குடி மின்பகிர்மான கிளையின் சார்பாக ஐடிஐ படித்து டிஎன்பிஎஸ்சி எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியின் நிறைவு விழா தனியாா் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது
நிகழ்்்ச்சிக்கு வில்சன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பல மாதங்களாக பயிற்சி அளித்த நியுட்டன் குருசாமி, கான்ஸ்டன் ஆகியோரை பாராட்டினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கினைப்பாளர் செல்வி பிஸ்மியா வில்சன் செய்திருந்தாா். பயிற்சி நிறைவு விழாவில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்