தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஜப்பசி பவுர்ணமியை முன்னிட்டு குரு மகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்திலான சிறப்பு அபிஷேகம் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
குரு மகாலிங்கேஸ்வரரை அன்னாபிஷேகம் செய்து வணங்கினால் வறட்சி நீங்கும், பசுமைவளம் செழித்து பஞ்சம் பறந்தோடும், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகமாகும். அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க அன்னாபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்குபெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், தீபாரதனையும் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.