தூத்துக்குடி மாநகராட்சி சாலைகளில் இருபுறமும் மரங்கள் உள்ளது. பல இடங்களில் 50 வருடங்களுக்கு மேலான மரங்களும் உள்ளது. வேம்பு. வாகை உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் பாளை ரோடு நீதிமன்றம் எதிரே உள்ள வணிக வளாகம் அருகில் இருந்த ஒரு வேம்பு மரம். ஒரு வாகை மரம் இரண்டு மரங்களை வணிக வளாக நிறுவனத்தினர் ஆட்கள் மூலம் இரண்டு மரங்களும் வெட்டப்பட்டது வெட்டப்பட்ட மரங்கள் வாகனங்கள் மூலம் மரங்கள் மட்டும் கொண்டு செல்லப்பட்டது மரத்திலிருந்து இலைகள் கிளைகள் எல்லாம் நடுரோட்டில் அப்படியே போடப்பட்டுள்ளது இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளார் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கடந்த இரண்டு மாத காலமாக மாநகரில் உள்ள பல்வேறு இடங்களில் நடுரோட்டில் இருக்கும் வேம்பு. வாகை. ஆலமரம். அரசமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டப்பட்டு மரத்தை வாகனங்கள் மூலம் ஏற்றி செல்லப்படுகிறது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தற்போது மௌனம் காத்து வருகிறது ஆகையால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நீதிமன்றம் எதிரே உள்ள வணிக வளாகத்தினர் இரண்டு மரங்கள் வெட்டப்பட்டு மரத்தை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.
தூத்துக்குடியில் சாலையிலிருந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டது கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.