Thursday, 24 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரி எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கி உள்ளது தேர்தல் பரப்புரையில் திமுக அமைப்பாளர் இரா. சிவா பேச்சு

Last updated: September 21, 2026 7:26 pm
Tamilagapuratchi
Share
SHARE

புதுச்சேரி, செப். 21–

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் கொள்கை பரப்பு செயலாளரும், புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சரும், மாநில துணை செயலாளருமான க. பொன்முடி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா. சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் ஆ. லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன். கெளதமசிகாமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், விக்னேஷ் கண்ணன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கெளதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா டி. சரவணன் ஆகியோர் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலையில் அவ்வை நகர், புதுப்பேட், முத்துலிங்கம்பேட், குறிஞ்சி நகர் பகுதியிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக வேட்பாளர் சேது செல்வதற்கு பொதுமக்கள் மலர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை வெற்றி பெற வைத்தால், தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவார் என்றும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ஆளும் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் அரசு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறினர்.

குறிஞ்சி நகர் பகுதியில் தி.மு.க. மாநில அமைப்பாளர் இரா. சிவா பேசியதாவது:- புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். ஆனால் தி.மு.க.வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் நட்பு போட்டி என்ற சூழ்ச்சி செய்தனர். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி மக்களால் விரும்பி கொண்டு வரவில்லை. அதிர்ஷ்டத்தில் தான் ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார். தட்டாஞ்சாவடி தொகுதி தான் முதலமைச்சர் ரங்கசாமியை வளர்த்து ஆளாக்கியது. இந்த தொகுதி மக்களுக்கு ரங்கசாமி எதுவும் செய்யவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை கைவிட்டுவிட்டார். மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஏனாமில் போட்டியிட்டார். ஆனால் ஏனாம் மக்கள் தோற்கடித்தனர். மீண்டும் கடந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போது தட்டாஞ்சாவடி தொகுதி மக்களை மறந்துவிட்டு வேறு தொகுதிக்கு சென்றுவிட்டார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய சேதுசெல்வத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். முதல்வர் ரங்கசாமி மக்களை திரும்பி பார்ப்பது இல்லை. அவருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். புதுச்சேரியில் நல்லாட்சி நடக்க வேண்டும். புதுச்சேரியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. புதுச்சேரி எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் மிகமிக பின்தங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article “வேலவன் ஜுவல்லர்ஸ் நகைகளுக்கு உடனடி தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை!!!
Next Article சமுதாய மக்களுக்கு அரசியலில் விழிப்புணா்வு இருக்க வேண்டும் தூத்துக்குடி நாடாா் மகமை செயலாளர் சந்திரசேகரன் அறிவுரை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் அகற்றி புதிய சாலை. எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில்வே நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு பொதுமக்கள் வரவேற்பு.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்

By Tamilagapuratchi
தூத்துக்குடி

ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவர் சிறப்பு மஹா யாக வழிபாடு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?