தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதவாது காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான சாமுவேல் ஞானதுரை காங்கிரஸ் கட்சிக்கு தொடா்ந்து பணியாற்றி வருகின்றாா். இந்நிலையில் அவரது பணிகளை முடித்து விட்டு முள்ளக்காடு கக்கன்ஜி நகா் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அவரது காா் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இரவில் காா் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக தேவையற்ற செயல்கள் இரவு நேரங்களில் அதிகம் நடைபெறுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு நலன் அவசியம் என்பது உணா்ந்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணிகளில் கூடுதல் கவணம் செலுத்தி இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவா்களை தடுக்கவும் குற்றச்செயல்களில் ஈடுபவா்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காா் கண்ணாடியை உடைத்த சேதப்படுத்தியவா்களை அடையாளம் கண்டு முத்தையாபுரம் காவல்துறையினா் துாித நடடிவக்கையை எடுத்து மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்எம் சகாயராஜ் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளாா்.
தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் நிா்வாகி காா்உடைப்பு மாவட்டதலைவா் சகாயராஜ் கண்டனம்