
வெங்கடேஷ் பண்ணையார் 23வது ஆண்டு வீர வழிபாடு குறித்து ஆலோசனை
தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 23வது ஆண்டு வீர வழிபாட்டை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சுபாஷ் பண்ணையாரின் இல்லத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள வீர வழிபாடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் அதனை சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.