Saturday, 20 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
உலகம்தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி நடைபெறுகிறது. நடுநிலையாக விசாரிக்க முனீஸ்வாி எஸ்.பியிடம் கோாிக்கை மனு

Last updated: June 16, 2026 4:29 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி முனீஸ்வரி நோில் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, என்னுடைய பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டு தவறான தகவல்கள் கூறப்பட்டு வருவதால், உண்மை நிலையை தங்களிடம் பதிவு செய்யவும், எனது பாதுகாப்பிற்காகவும் இந்த மனுவை அளிக்கிறேன். நான் 03.05.2026 அன்று இசக்கியம்மாள் என்ற கமலாவுடன் காரில் சாயல்குடி சென்றிருந்தேன். இசக்கியம்மாள் எனது கணவரிடம் என்னை தவெக கட்சி நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அழைத்து செல்வதாகக் கூறி தான் அழைத்துச் சென்றார். ஆனால், என்னைப் பொறுத்தவரை அந்த நாளில் என்மீது எந்தவிதமான பாலியல் குற்றமும், பாலியல் துன்புறுத்தலும், வன்முறையும் நடைபெறவில்லை. எனக்கு அப்படியான எந்த சம்பவமும் நடக்கவில்லை. என் முன்னிலையில் எந்தவித பாலியல் குற்றச்செயலும் நடைபெறவில்லை என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் 01.06.2026 அன்று இசக்கியம்மாள், பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் என்று அறிந்தேன். மேலும், சமூகவலைதளங்களில் பேட்டிகளில் பேசும்போது, அவருடன் மேலும் ஒரு பெண் வந்ததாகவும், அந்த பெண்ணும் பாதிக்கப்பட்டதாகவும் முதலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், அந்த பெண் நான்தான் என்று எனது பெயரை மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி, நான் சரவணன் எம்.எல்.ஏவிடம் பணம் வாங்கி அமைதியாகிவிட்டேன் என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார். மேற்படி வழக்கில், என்னையும் பாதிக்கப்பட்டவராக பொய்யாக கூறுமாறு இசக்கியம்மாள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவர் என்னை மிரட்டி வந்தார். நான் உண்மையைச் சொன்னால், “காவல்துறை உன்னை அடித்து சித்திரவதை செய்வார்கள்”, “உன்னை தவறாக காட்டும் வீடியோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்று மிரட்டினார். மேலும், “குற்றம் நடந்ததாக நீ பொய் சொன்னால், பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அரசு வேலை கிடைக்கும், இழப்பீடு கிடைக்கும், மேலும் நானும் உனக்கு பணம் வாங்கித் தருவேன்” என்று ஆசை வார்த்தைகளும் கூறினார். இவ்வாறு மிரட்டலும், ஆசை வார்த்தையும் கூறி, என்னை உண்மைக்கு புறம்பான ஸ்டேட்மண்ட் அளிக்க தூண்ட முயற்சி நடைபெறுகிறது. இதனால் நான் மிகுந்த மனஅழுத்தத்திலும், பயத்திலும், அவமானத்திலும் உள்ளேன். எனது பெயரை தவறாக பயன்படுத்தி, என்னை பொய்யான புகார் அளிக்க தூண்டி, இந்த வழக்கை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று நான் அஞ்சுகிறேன். மேலும், இசக்கியம்மாள் எனது பெயரை தனது சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பயன்படுத்தி வருகிறார். நான் எம்.எல்.ஏவிடம் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோரின் குடும்பத்தினரிடமிருந்தும் பணம் பெற்றுவிட்டதாக உண்மைக்கு புறம்பான அவதூறு தகவல்களை பரப்பி வருகிறார். இத்தகைய பொய்யான தகவல்கள் காரணமாக நான், என் கணவர் மற்றும் என் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சல், சமூக அவமானம் மற்றும் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளோம். ஊர் மக்களிடையிலும், சமூக வட்டாரங்களிலும் என்னைப் பற்றிய தவறான பேச்சுகள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் என் குடும்ப வாழ்க்கையும், என் மரியாதையும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனது பெயர், குரல் பதிவு, புகைப்படம், வீடியோ அல்லது என்னை அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் என் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படாத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், எங்கள் தரப்பு தவெ வோடு தொடர்புடையவர்கள் என்பதால், இந்த வழக்கு அரசியல் கோணமாக மாற்றப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவையும் மிரட்டி, எங்கள் குடும்பத்தையும் தேவையில்லாமல் பாதிக்க முயற்சி இருக்கிறதா என்பதையும் தாங்கள் நடுநிலையாக விசாரிக்க வேண்டுகிறேன். எனக்கு தெரிந்தவரையில், இந்த சம்பவத்துக்கும் ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் யாரையும் காப்பாற்றுவதற்காகவோ, யாரையும் தவறாக குற்றம் சாட்டுவதற்காகவோ இந்த மனுவை அளிக்கவில்லை. என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும், எனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்பதையும், என்னை பொய்யான ஸ்டேட்மண்ட் அளிக்க மிரட்டியும் ஆசை வார்த்தை கூறியும் தூண்டியுள்ளனர் என்பதையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மனுவை என் சொந்த விருப்பத்தால் அளிக்கிறேன். நான் யாருடைய அழுத்தத்தாலும், மிரட்டலாலும், தூண்டுதலாலும் இந்த மனுவை அளிக்கவில்லை. எனக்கு தெரிந்த உண்மையை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக என் சொந்த விருப்பத்தால் இந்த மனுவை அளிக்கிறேன். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக உள்ளேன். எனவே, என் மனுவை ஏற்று, என் ஸ்டேட்மண்ட்-ஐ சட்டப்படி பதிவு செய்து, என்னை மிரட்டி பொய் புகார் அளிக்க தூண்டியவர்கள் மீதும், என் பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அளித்துள்ள கோாிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் புகாா் விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை
Next Article சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழ்நாட்டிற்கு முறையான நிதி வழங்காத ஓன்றிய பாஜக அரசின் டெல்லி அணியை இந்த தோ்தலில் தமிழ்நாடு அணி வீழ்த்தியாக வேண்டும். காலத்தின் கட்டாயம் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்குற்றம்சென்னைதமிழகம்தூத்துக்குடி

சகோதரியிடம் பணம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார் … முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் மூலம் இழிவுபடுத்திய தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ். பி. மாரியப்பன் கோரிக்கை!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?