Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!

Last updated: October 22, 2025 5:04 pm
Tamilagapuratchi
Share
SHARE

மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளம் குளத்திலிருந்து விவசாயிகளின் பாசனத்திற்கு செல்லும் மூன்று பாசன வாய்க்கால் தூர் வாரும் பணியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி செய்து சகோதரர் மோகன் சி லாசரஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அப்பகுதியில் உள்ள பேய்குளம் பாசன வாய்க்கால் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் சங்கத்திற்கு வருகை தந்த சகோதரருக்கு பூங்கொத்து, பழங்கள், கொடுத்து சால்வைகள் அணிவித்து விவசாயிகள் சார்பில் அனைத்து விவசாயிகள் சார்பாக உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

 

இதனை தொடர்ந்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நமது சத்தியம் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இந்த விவசாய சங்கம் ஆனது 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 154 வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்ற சிறப்பான விவசாய சங்கமாக செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு தேவையான பல காரியங்களை அவர்களே செய்து கொள்கிறார்கள் அவர்களுக்கு தேவையான ஒரு சின்ன உதவி செய்வதற்கு நான் இங்கு வந்துள்ளேன்

 

இவர்கள் செய்கிற காரியங்களை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது இதுபோல விவசாய அந்த சங்கங்களை நாம் உற்சாகப்படுத்தினாலே அவர்கள் எழுந்து பல விஷயங்களை செய்வார்கள். விவசாயிகள் ஆசீர்வாதமாக இருந்தால் தேசம் ஆசீர்வாதமாக இருக்கும். முக்கியமாக இந்த தாமிரபரணி வற்றாத ஜீவநதி இந்த நதியின் மூலம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயம் போன்றவற்றுக்கு பெரிதும் பயன்பெற்று வருகின்றன

 

தமிழ்நாட்டில் உருவாகி தமிழ்நாட்டில் கடலில் கலக்கிற ஒரு அற்புதமான ஆசீர்வாதமான நதி. இந்த தாமிரபரணியில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது அரசாங்கம் புதிய நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதன்படி இந்த தாமிரபரணி ஆற்றின் வெள்ள காலங்களில் தூத்துக்குடியின் வடபகுதியில் புதிய நீர் வழித்தடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பயன்படும்

 

அதே போல் தென்பகுதியில் சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரப்பட்டினம் அந்த போன்ற பகுதிகள் பயன் வரும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தையும் தாமிரபரணியில் இருந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள் விவசாய நிலமாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

 

இதற்கான திட்டங்கள் வகுத்துள்ளதாக கேள்விப்படுகிறேன் இவற்றை துரிதப்படுத்தி சீக்கிரமாக செயல்படுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆசீர்வதிக்கபடவும் லட்சக்கணக்கான தரிசு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆசீர்வாதமாக மாறும் இதை அரசாங்கத்திற்கு விண்ணப்பமாக வைக்கிறோம் தாமிரபரணி தண்ணீர் வீணாகாதபடி சரியானபடி சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்பதாக கேட்டுக்கொண்டார்

 

இந்நிகழ்ச்சியில் பேய்குளம் நிலச் சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி தலைவர் குணசேகரன், செயலாளர் ஜெய பொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் எட்வின், ஏசு விடுகிறார் ஊழியத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!
Next Article தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் வீட்டு மனை உடனடியாக வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.: முன்னாள் அமைச்சர், மேயர், உள்ளிட்ட பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

50 ஆண்டு கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். மாப்பிள்ளையூரணியில் 560 பேருக்கு பட்டா வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினாா்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?