Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலைப்பேசி எண்களுக்கு புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம், குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

Last updated: October 22, 2025 4:58 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.

முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது குறைகளை பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 16 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவ மழை 4 நாட்களாக பெய்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் 58 வார்டுகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் ரெகுலராக இருந்து வருகிறது. 16, 17 ஆகிய வார்டுகளில் மட்டும் 3 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதிலும் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 16, 17, 18 ஆகிய 3 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளும், சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுவதால் மழைநீர் தேங்கியுள்ளது. அதையும் முறைப்படுத்தி அப்புறப்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் மழை காலம் முடிந்து ஜனவரிக்குப் பின் சாலை அமைக்கும் பணி நடைபெறும். மாநகரில் உள்ள பல விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்டவைகளில் தேங்கிய மழைநீரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையின் போது கால் சென்டருக்கு 40 புகார்கள் வந்த நிலையில் அவை அனைத்திற்கும்; தீர்வு காணப்பட்டுள்ளது. வார்டு 3, 7 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத நிலை உள்ளது. அங்கும் மழை காலத்திற்குப் பின் முழுமையாக சாலை பணி துவங்கும். மாநகராட்சிக்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 27 கி.மீ தூரம் உள்ளது. அதில் மழையால் சேதமடைந்து காணப்படும் சிறிய குழிகள் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் பேட்ச் ஒர்க் முழுமையாக நடைபெறும். மாநகராட்சி பகுதிக்குள் எல்லா பணிகளையும் முறைப்படுத்தி முறையாக கண்காணித்து வருகிறோம். கிழக்கு மண்டலத்தில் இதுவரை பெறப்பட்ட 789 மனுக்களில் 769 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 20 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.

4 மண்டலங்களிலும் 3200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1258 மனுக்களில் 1247 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 11 மனுக்கள் நடவடிக்கையில் இருந்து வருகின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்பு மாநகராட்சிக்கு அவசியம். எந்த புகாராக இருந்தாலும் கால் சென்டர் அல்லது மேயர், ஆணையர் தொலை பேசி எண்களுக்கு புகாராக தெரிவிக்கலாம். எல்லோருக்கும் சுகாதாரம் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு அதற்கான முகாம்களும் நடைபெறும் என்று கூறினார். பின்னர் பிறப்புச்சான்றிதழ் ஒருவருக்கு உடனடியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன். இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் அனுசவுந்தர்யா, அபிலாவண்யா, ஹரிகிருஷ்ணன் தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, ரெக்ஸ்லின், மும்தாஜ், மரியகீதா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், வட்ட பிரதிநிதி மூக்கையா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் – பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அகற்ற கோரி மனு – ஆக்‌ஷனில் இறங்கி அதிரடி காட்டிய ஆணையர் ப்ரியங்கா ஐ.ஏ.எஸ் – பொதுமக்கள் பாராட்டு!!!
Next Article மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய நீர் வழி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கோரிக்கை!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளா் சேகா் இல்ல விழா : பத்திாிகையாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் வாழ்த்தினாா்கள்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை செய்தாா்!!!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி நள்ளிரவில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?