தூத்துக்குடி மாநகராட்சியில் பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி துரைக்கனி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்த மனுவில், நாங்கள் துரைக்கனி நகர் குடியிருப்பில் உள்ளோம். மீளவிட்டான் கிராமத்தில் ஜோசப் யோகேஸ் என்பவரின் பெயரில் உள்ள பிளாட்டுகளுக்கு வடபுறம் 1985-ம் வருடத்திற்கு முன்பே கிழமேல் 20 லிங்ஸ் அகல பொதுப்பாதை உள்ளது. அந்த பொதுப்பாதையின் வழியாக நாங்கள் துரைக்கனி நகர் குடியிருப்புக்கு சென்று வருகிறோம். மேலும் பொதுப் பாதையில் எங்களது பகுதிக்கு மின் கம்பங்கள் போடப்பட்டு மின்சாரம் வருகிறது. அந்த பாதையின் வழியாக குடிநீர் பைப் லைன் வருகிறது. மேற்படி பாதையில் மாநகராட்சியால் ரோடு போடும் பணிக்காக சரள் மற்றும் கல் பரப்பப்பட்டது. தற்போது தனிநபர் ஒருவர் , அந்த பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து மேற்படி பொதுப் பாதை இல்லாதவாறு தனது நிலத்தின் மத்தியில் பாதை இல்லாத தனது சொந்த இடத்தில் மக்கள் வரி பணத்தில் ரோட்டை மாற்றம் செய்து புதிதாக ரோடு அமைத்துள்ளார். இது தாெடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!